கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கு… நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படும் நிலை….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது. புதிய பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரத்திற்கு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்க பேருந்து நிலையத்திற்கு அதிகளவில் செல்கின்றனர், ஆனால் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கி உள்ளதால் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைப்போல் கழிவு நீர் அடைப்பு அடிக்கடி ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுகிறது இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது கீழக்கரை பேரூந்து நிலையம் மட்டுமல்லாமல் அனேகமான பகுதிகளில் இந்த சூழல்தான் ஏற்பட்டுள்ளது.

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு