இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது,

திருமங்கலம் நகர் காவல் நிலைய சரகத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில்,. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜித் குமார் உத்தரவின் பேரில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்… தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்த மாம்சபுரத்தை சேர்ந்த, அமானுல்லா முகைதீன் பிச்சை (62) விருதுநகர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விமல் (35) என்பவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 119 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் மீது திருமங்கலம் நகர் போலீசார், வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்