Home செய்திகள் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை விடிய விடிய கொட்டி தீர்த்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கம்,

உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை விடிய விடிய கொட்டி தீர்த்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கம்,

by mohan

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய சுமார் 110 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.உசிலம்பட்டியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான செல்லம்பட்டி, கருமாத்தூர், உத்தப்பநாயக்கணூர், சீமானுத்து, தொட்டப்பநாயக்கணூர், அல்லிகுண்டம், மூப்பபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.இதில் சீமானுத்து பகுதியில் உள்ள நல்லிவீரன்பட்டியிலும், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி காணப்படுகிறது.மேலும் மூப்பபட்டி கிராமத்தில் இரு வீடுகள் மழையால் இடிந்து வீழ்ந்தது சேதடைந்துள்ளது, இதில் குடியிருந்த ஐந்திற்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.மேலும் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்து காணப்படுகிறது.மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து மழை பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com