உசிலம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த குதிரைவாலி பயிர்கள் இரவு பெய்த கனமழையால் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான கணவாய்பட்டி, எழுமலை, நல்லுத்தேவன்பட்டி, கள்ளபட்டி போன்ற பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கில் விவசாயிகள் மானாவாரி பயிரான குதிரைவாலி பயிரை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் குதிரைவாலி பயிர்கள் நல்லவிளைச்சலை கண்டுள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தது. விவசாயிகள் ஒருவாரத்தில் அறுவடை பணிகளை தொடங்கவுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 3மணி நேரம் பெய்த கனமழையால் குதிரைவாலி பயிர்கள் அனைத்து மழையால் நனைந்து சேதமாகின. மேலும் பயிர்கள் அனைத்தும் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கனமழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.உசிலை சிந்தனியா