மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நேற்று நட்டுவைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை திருநகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் மேலும் அவர் தெரிவிக்கையில்…. இதன்மூலம் காவல்நிலையங்களும் அழகுபெறும் மற்றும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார் இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்