ராமலிங்காபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பிரார்த்தனை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இராமலிங்காபுரம் கிராமத்திற்கு வருகை தந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அவர்கள் பகுதி பொது மக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இலவச முக கவசம் வழங்கினார்.மேலும் அப்பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பிராத்தனை செய்தார் உடன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்