
இராஜபாளையத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்புஇட ஒதுக்கீடு என்பது ஒரு சமூக நீதி பிரச்சனையாகும் இந்த சமூக நீதி பிரச்சனைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறதுமாநிலங்கள் மத்திய அரசுக்கு வழங்கிய 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு போட்டோம் அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம் ,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ,மற்றும் பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் ஆனால் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என தெரிவித்து அங்கேயும் வழக்கு தொடர்ந்து நடைபெற்றது அந்த வழக்கில் நீதிபதிகள் சமூக நீதியை வெறுக்கக் கூடாது என தெரிவித்தது ,ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மாநில அரசு இந்த ஆண்டு வலியுறுத்தவில்லை என காரணத்தைச் சொல்லி இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்த ஆண்டு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காரணத்தினால் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதுஆகமொத்தத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு தன் சொந்த கொள்கையான ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்தி வருகிறதுஅதேபோன்று அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்ட தீர்மானத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படட்டு 2 மாதங்களாக காலந்தாழ்த்தி வருவது வேண்டுமென திட்டமிட்டு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதற்கு சதி செயல் இதை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் கையெழுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்மனு நீதியில் கூறப்பட்டதை திருமாவளன் எடுத்துக் கூறியபோது சர்ச்சைகளை கிளப்பி அவர் மீது வழக்குத் தொடரும் காவல்துறை மூத்த தலைவர் நல்லகண்ணு மீது சமூக வலைதளங்களில் மிக அசிங்கமான புகைப்படம் போட்டு அவருக்கு கலங்கும் ஏற்படுத்தும் செயல் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை சென்னை மாநகர உயர் காவல் அதிகாரி ஒருவர் குற்றவாளிகளை பிடித்து விட்டோம் எனக் கூறினார் ஆனால் இதுவரை எந்த வழக்கும் பதியவில்லைதமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா இல்லை தமிழகத்தில் ஆட்சி புரிகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கு முதலமைச்சருக்கு தெரிந்து வழக்கு போடப்பட்ட அல்லது முதலமைச்சருக்கு தெரியாமலே வழக்கு போடப்பட்டு உள்ளதா என்பது தெரியவில்லை மத்திய அரசு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது இதற்கு தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள் துணை போகின்றனர் இதுபோன்ற கொள்கைக்கு மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறினார்தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது இந்த நேரத்தில் விவசாயிகளை பாதுகாக்கவும் விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை வேண்டும் பயிர் காப்பீடு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இங்கு பட்டாசு உற்பத்தி ஆகி அதிகளவில் தேங்கி உள்ளது இதை தடையில்லாமல் விற்பனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்ஊழலை எதிர்த்து மோடி பேசுகிறார் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி துறை அமைச்சராக இருந்தவர் ஊழலில் சிறை தண்டனையில் இருந்தவர் , பிரதமர் மோடி கட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்யாமல் இருந்தாலே பெருமளவு ஊழல் குறைந்துவிடும்எய்ம்ஸ் மருத்துவமனை நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மதுரையில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது ஆனால் இந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை ஆனால் இந்த சூழ்நிலையில் தொடங்காத வேலைக்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, தென்மாவட்ட பகுதியை சேர்ந்த எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த குழுவில் இடம் பெறவில்லை சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளது அவர் ஒரு அமைப்பு சார்ந்து செயல்படக்கூடியவர் அவர்மீது அவரை அந்த குழுவில் இருந்து நீக்க வேண்டும்பெட்ரோல் டீசல் விலைகளில் அரசு தீர்மானித்து இந்த நிலை மாறிய நிலையில் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் தான் என்னையும் செய்து வருகிறது மத்திய அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு அத்தகைய பொறுப்பை வழங்கிவிட்டது அதனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பைசா 2 பைசா என விலையை உயர்த்தி இன்று உச்சத்தில் இருக்கிறது இன்னும் லிட்டருக்கு 3 ரூபாய் பெட்ரோல் டீசல் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை அதிகளவில் உயரமும் ஆகையால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்மத்திய அரசுக்கு உறுதியான கொள்கை இல்லாத காரணத்தினால் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது அதே போல் தங்க விலையை நிர்ணயிப்பது யார் என தெரியவில்லை உடல் முழுவதும் நகை வாங்கி அணிய வில்லை என்றாலும் தாலிக்கு தங்கம் தேவைப்படுகிறது சாதாரண மக்கள் காதில் மாற்றிக்கொள்ள கடுக்கன் மூக்குத்தி தாலி போன்ற விளக்கம் தேவைப்படுகிறது இதே நிலைமை நீடித்தால் இனிவரும் காலங்களில் தங்கமே இல்லாமல் தாலி கட்டும் அவலநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது ஆகையால் மத்திய அரசு கடுக்கண் கம்மல் மூக்குத்தி தாலி போன்றவைகளை ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு விலையை குறைக்க வேண்டும் இல்லையென்றால் இலவசமாக வழங்க வேண்டும்மத்திய அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் நிறைவேற்றியது ஆனால் அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று தற்போது வெங்காய விலை அதிகரித்த நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு மீது வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது இது அவருடைய கொள்கையில் முரண்பாடு நிலவுகின்றது2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு திமுக கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை என்ற பெயரில் ரெய்டு செய்து வருகிறது இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் இதே நிலைமை நீடித்தால் நாளை என் வீட்டில் கூட சோதனை நடைபெறும் என முத்தரசு தெரிவித்தார்வருகின்ற நவம்பர் 21-ஆம் தேதி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் தொழிலாளருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெறும் அந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் முழுமையாக ஆதரிக்கிறது நவம்பர் 26 ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு இந்த போராட்டம் நடைபெறும்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.