திருப்பரங்குன்றம் ஆலங்குளம் பகுதியில் ருபாய் 10 லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடையை திமுக எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள பெரிய ஆலங்குளம், ஒ. ஆலங்குளம் பகுதியில் 10 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் பயணிகளுக்கான இருக்கையுடன் கூடிய நிழல் குடை திறந்து வைத்தார்.இதில் கோரணா விழிப்புணர்வு குறித்த விளம்பர பலகையும் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அவசர காலங்களில் பெருங்குடி காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றின் எண்களுடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகள் நிறுவப்பட்டிருந்ததுஇது குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறும்போது நீண்ட நாட்களாக பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரக்கூடிய வகையில் நிழல் கூட இல்லை அதனால் தொகுதி எம்எல்ஏ நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு நிழற்குடைகள் இறக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் பயன்பெறுவர் மேலும் கொரான விழிப்புணர்வு படங்கள் , அரசு அலுவலகங்கள், காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் ஆகியவை போர்டில் இடம் பெற்றுள்ளது.இதனால் அவசர காலங்களில் பொது மக்கள் பயனடைவர் என MLA சரவணன் கூறினார்பேட்டிசரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்