இராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அக்ஷராப்யாஸம் (எழுத்து பயிற்சி ) 100க்கும் மேற்பட்ட குழந்தை பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யா சரஸ்வதி முன்பாக அக்ஷராப்யாஸம் என்ற குழந்தைகளுக்கான முதல் எழுத்து பயிற்சி நடை பெற்றதுசரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜயதசமியான இன்று பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி வழங்கக்கூடிய அக்ஷராப்யாஸம் என்ற சம்பிராதய படி எழுத்து பயிற்சி சரஸ்வதி திரு உருவ சிலை முன்பு குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர் மடியில் அமரவைத்து எழுத்து பயிற்சி நடைபெற்றது .இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று அதிகாலை 6 மணி முதல் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டு அ முதல் ஃ வரை அரிசியில் எழுத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்