சட்டவிரோகதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

மதுரை மாவட்டம். வாடிப்பட்டி, ஆண்டிபட்டி பங்களா அருகே வாடிப்பட்டி போலீஸார் ரோந்து சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக மணல் திருடி கொண்டிருந்த, ஆறுமுகம் உட்பட நான்கு நபர்களை கைது செய்து, இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு ஹிட்டாச்சி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.செக்கானூரணி அருகே சொரிக்காம்பட்டியில் துரைப்பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் அவர்கள், புகாரின் பேரில், சட்டவிரோதமாக மணல் திருடிய, ஈஸ்வரன் உட்பட மூன்று நபர்களை கைது செய்தும், இரண்டு டிப்பர் லாரியை பறிமுதல் செய்யபட்டது.கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் கமண்டலஆறு அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்கு புறம்பாக இரண்டு மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டு இருந்த நபர்களை கைது செய்தும், மேற்படி மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..