
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருவில்லிபுத்தூர் பகுதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூன்று மணி நேரம் நல்ல மழை பெய்தது. மலையில் பெய்த மழை காரணமாக, வத்திராயிருப்பு காலாங்கரை அம்மன் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தப்பகுதியில் உள்ள நீரோடை பாலத்தில், குப்பைகள் தேங்கி அடைக்கப்பட்டிருந்ததால், தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் சென்றது. இதனால் பாலம் அடைப்பை அகற்றுவதற்காக, வத்திராயிருப்பு காவல்நிலைய போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் காலாங்கரை அம்மன் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. நீண்ட நாட்களுக்குப்பின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை காண்பதற்காக அந்தப்பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து குவிந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.