
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பதினொருவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இடம் வழங்கினார் இந்த முதியவர்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர், மதுரை மாட்டுத் தாவணி, பூ மார்க்கெட்டு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெறுவது வழக்கமாம்.இவ்வாறு, பெறும் யாசகப் பணத்தில் சாப்பாட்டு செலவு போக மீதி பணத்தை சேமித்து பல்வேறு நல்லப் பணிகளை செய்து வருகிறார் பூல்பாண்டியன்.இவர், ஏற்கெனவே தாம் யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பதினொருவது தடவையாக ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிதிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் வழங்கினார்.மேலும் அவர் கூறும் போது..முதல் முதலாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ரூபாய் 100 ரூபாய் பெற்றுக்கொண்ட அவர் ராசியில் தான் இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரம் கொடுத்து உள்ளேன் அமைச்சர் செல்லூர் ராஜூ எனது நன்றி என்ன சொன்ன பூல் பாண்டியன்.
செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.