
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் கொண்டமநாயக்கன்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம் ஒரு பகுதி சீனிவாசா நகர், பாலாஜி நகர், காமராஜ்நகர் உள்ளிட்ட கிராமங்களையும் 18 வார்டுகளைகொண்டுள்ளது. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, வடிகால் வசதி, சுகாதாரம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், வரி வசூல் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற் காக செயல்பட்டு வந்த பேரூராட்சி நிர்வாகம் தற்போது செயலிழந்து காணப்படுவதாகவும் இதற்கு காரணம் நிரந்தரமான அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தில் அனைத்துப் பணிகளும் மந்த நிலையில் செயல் பட்டுவருதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவல கத்தில் பணிபுரிந்து வந்த செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், பணியிட மாறுதலாகி சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தற்போது வரை செயல் அலுவலர் நியமனம் செய்யவில்லை. மேலும் தலைமை எழுத்தர் கொரோனா தொற்றால் இறந்து விட்டதால் அந்த இடமும் காலியாக உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, வடிகால் வசதி, சுகாதாரப் பணிகளை செய்து தரக்கோரியும், பிறப்பு, இறப்பு, ப்ளான் அப்ரூவல், வரி வசூல், வறுமை ஒழிப்பு சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட சான்றி தழ்களை பெறுவதற்காக ஏராளமானோர் வெளியூர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால், பேரூராட்சி நிர்வாகத்தில் உரிய அதிகாரிகள் இல்லாததால் கொரோனா பணிகள் தொய்வில் இருக்கும் சூழ்நிலையில் இன்னும் நிரந்தர நிர்வாக அதிகாரி நியமனம் செய்யாமல்,பொறுப்பு அலுவலரை வைத்தே பணியை செய்வதால், பேரூராட்சி வளர்ச்சி பணிகளும் மந்தமாக தேங்கி, ஒரு சீரற்ற நிலை நிலவுகிறது. மேலும் பேரூராட்சி யில் போதிய நிதி இல்லாததால் சுகாதார பணிகளை மேற்கொள்வதிலும் தெருவிளக்கு உள்ளிட்ட விலை பராமரிப்பு செய்வதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களின் நலன்காக எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்க முடியாத காரணத்தினால் பணிகள் தடைபடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு இ.ஓ.வையும் , தலைமை எழுத்தரையும் நியமனம் செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.