
தென்தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு புதிய சலுகைகளை அரசு வழங்கும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியது:மதுரை மாவட்டத்தில் அதிகம் பரிசோதனை காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.இந்தியாவில் தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் என்றும், அதனாலேயே நோய் தொற்றும் குறையத் தொடங்கியுள்ளது.மதுரை மாவட்டத்தில், நகரில் அதிகபட்சமாக 4 ஆயிரம் பரிசோதனைகளும், புறநகர் பகுதிகளில் எட்டாயிரம் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.மதுரையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவான எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.அதற்காக ஜப்பான் நிதி கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில் இ.பாஸ் முறையை மிக எளிமையாக்க கூடுதலாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதால், இ.பாஸ் எளிதாக கிடைக்கும்.மதுரை அரசு மருத்துவமனையில் நான்கு மாடி கட்டிடமும், அதிநவீன கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டை 157..லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 25 கோடி மதிப்பீட்டில் புற்று நோய் அதிநவீன கருவியும், மதுரையில் 7 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளோர் என்றும், அதிகளவில் பிளாஸ்மா தானம் வழங்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், மதுரை அருகே அம்பலகாரன் பட்டி, சக்கிமங்கலத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.மதுரை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், வண்டியூர் கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது என்றும், பாலமேடு சாத்தையாறு அணை ஆழப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதுரை நகரில் குடிநீர் ஆதாரங்களுக்காக, வைகையாற்றின் குறுக்கே படுகை அணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வைகை ஆற்றின் உள்ளே சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ரயில்வே லெவல் கிராசிங் அருகே மேம்பாலமும், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே மேம்பாலம் கட்டப்படும்.தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், தமிழக முதல்வர் பழனிச்சாமி.பேட்டியின்போது, தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயக்குமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராசன் செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுலான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.