வாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் திமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர செயலாளர் பால்பாண்டியன் தலைமை வகித்தார் .மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தார் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார் . நிகழ்ச்சியின்போது கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு வார்டு செயலாளர் ராம்மோகன் தலைமை வகித்தார். இதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் சிவகுமார் தங்கராஜன் ரங்கசாமி ராமதாஸ் ராஜாராம் முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதுபோலவே வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வார்டு செயலாளர் ஆர்கே செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது .இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வடிவேல் மகாதேவன் ராஜேந்திரன் பெருமாள் அன்புச்செல்வன் பாண்டி கருணாநிதி குட்டி என்ற சந்தனகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்