
இந்திய ஆட்சிப் பணி 2019 ஆண்டின் IAS தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது.இதில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த கண் பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பூரணசுந்தரி.அவரை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அவரது வீட்டில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பூரணசுந்தரியின் சாதனையை வாழ்த்தி பேசி பாராட்டு சான்றிதழை வழங்கினார்.அரசுப் பொறுப்புகளை ஏற்கும் காலங்களில் நேர்மையோடும் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மேலும் அவரது பெற்றோரின் ஒத்துழைப்பையும் பெரிதும் பாராட்டினார்.தனது முயற்சிகளையும் வருங்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்ட பூரணசுந்தரி தன்னை பெரிதும் ஊக்கப்படுத்திய வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், மஸ்தான், கிரேசியஸ், அசோக்குமார், மற்றும் கோவிந்தராஜன் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.