Home செய்திகள் கோகுலாஷ்டமிக்கு தயாராகும் கண்ணன் சிலைகள்:

கோகுலாஷ்டமிக்கு தயாராகும் கண்ணன் சிலைகள்:

by mohan

மதுரையில், விரைவில் வரவுள்ள கோகுலாஷ்டமி விழாவுக்காக வெளி மாநில இளைஞர்களால் பகவான் கிருஷ்ணர் வண்ண வடிவத்தில் தயார் செய்து வருகின்றனர்.மதுரையில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழாவானது கிருஷ்ணர் ஆலயத்தில் உரியடித் திருவிழாவாக வெகு சிறப்பாக நடத்தப்படும்.இதேபோன்று கோகுலாஷ்டமியன்று பலர் வீடுகளில் கிருஷ்ணர் பொம்மைகளை பொதுமக்கள் பலர் விலைக்கு வாங்கி, அலங்கரித்து பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.இதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தாற்காலிக கூடாரம் அமைத்து, கிருஷ்ணர் உருவ பொம்மைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, வர்ணம் அடிக்கும் பணியானது நடந்து வருகிறது.

பிறகு பொம்மைகள் விற்பனைக்கு வரப்படும்.சிறிய வடிவிலிருந்து ரூ. 100 முதல் ரூ. 400 வரை விற்கப்படுமாம்.ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் என்பதால், பொம்மைகள் விற்பனையில் மந்தநிலையே, தொடர்வதாக வெளிநாட்டு இளைஞர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.தயார் செய்யப்பட்ட பொம்மைகளை மழைகாலத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கும் போதுமான வசதிகள் இவர்களுக்கு கிடையாது. இவர்கள் பெரும்பாலும் பேப்பர்கூழ், துணி, பிளாஸ்டர் பாரிஸ்ட் கொண்டு பொம்மைகளை தயாரித்து விற்பணை செய்து வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!