Home செய்திகள் திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையம் திறப்பு

திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையம் திறப்பு

by mohan

திருப்பத்தூரில்பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன்தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் .கேஆர்.பெரியகருப்பன்முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்  கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து தெரிவிக்கையில்:தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்ககொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை உடனுக்குடன் வழங்கி ஒவ்வொருவரும் ஒருவாரகாலத்தில் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மேலும்,பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பிற்கு சித்த மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என உத்தரவிட்டதற்கிணங்க சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷின் மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பெற 50 படுக்கை வசதிகளும்ää பெண்கள் சிகிச்சை 50 படுக்கை வசதிகளும் என 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் சித்த மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இந்த மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றிடலாம். இங்கு சித்த மருத்துவர்கள் மற்றும் யோகா ஆசிரியர்கள் பணி மேற்கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி வழங்கப்படுகிறது. தேவையானோர் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெற்றுக் கொள்ளலாம் என்றார.அதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்களை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் ,பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.யசோதாமணிவட்டார மருத்துவ அலுவலர் மரு.செந்தில்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ராஜேந்திரன்பாம்கோ கூட்டுறவுச் சங்கத்தலைவர் நாகராஜன்,,திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் .சண்முகவடிவேல்,திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இராதாகிருஷ்ணன் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

:செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!