Home செய்திகள் கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசம் காமராஜர் பேராசிரியர் ஆரோக்ய தாலால் கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசம் காமராஜர் பேராசிரியர் ஆரோக்ய தாலால் கண்டுபிடிப்பு

by mohan

தற்போது கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதால் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில் சாதாரண முகக்கவசம் அணிவதினால் சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிப்பதால் உடலில் நச்சுதன்மை(CO2) அதிகரிப்பதாகவும் அதனை தவிர்க்கும் வகையில் புதிய முக கவசம் கண்டுபிடிப்பு.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பேராசிரியர் அசோக்குமார் ஆகியோர் இணைந்து Nano Mask எனப்படும் புதிய தொழில்நுட்பத்துடன் முகக்கவசத்தை வடிவமைத்துள்ளனர்.இந்த முகக்கவசமானது சுற்றுப்புற காற்றிலுள்ள ஆக்சிஜன் (20.9%) அளவை மின்காந்தவியல் முறையில் ஆக்சிஜன் அளவை 33% ஆக அதிகரிக்க வழிவகை செய்கிறது. மேலும் சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிக்காமல் தவிர்த்து பாதுகாக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் ஆன முககவசம் கொரோனா நோய் கிருமிகள் தொற்றில் இருந்து பாதுகாப்பதோடு ட்டுமல்லாமல், மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கும் வெண்டிலேட்டர்கள் உதவியின்றி சுவாசத்தை சீராக்கவும், அவசர பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவையை குறைப்பதோடு சுவாசத்தை சீராக்க உதவுகிறது.குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசகோளாறு உள்ள நோயாளிகளுக்கு, இந்த Nano mask சுவாசத்தை சுலபமானதாகவும் மாற்றுகிறது. மேலும் 100 கிராம் எடைக்கு குறைவானதாகவும், மீண்டும் மின் சக்தியை ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலும் வடிவமைக்கபட்டுள்ளதால் ராணுவ வீரர்கள் உயர்ந்த மலைபகுதிகளுக்கு செல்லும்போதும் அங்குள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை சுயமாக சரி செய்வதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் உடல்தகுதிக்கு ஏற்றாற்போலும், வயதின் அடிப்படையிலும் அவர்களின் நுரையிரலை பாதிக்காத வண்ணம் ஆக்ஸிஜன் அளவை கட்டுப்படுத்தும் 4 வகையான சென்சார் பொறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கருவி நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும், ஆக்ஸிஜன் அளவு எங்கெல்லாம் குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் AC, ஜன்னல்கள் உள்ளிட்டவைகளில் இதே தொழில்நுட்பத்தை பொருத்தி கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த முகக்கவசத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல், பலமுறை பயன்படுத்தலாம் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!