Home செய்திகள்உலக செய்திகள் பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள் இன்று (ஜூன் 11, 1867

பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள் இன்று (ஜூன் 11, 1867

by mohan

சார்லசு பாப்ரி (Maurice Paul Auguste Charles Fabry) 11 ஜூன் 11, 1867ல் மார்சேயில் பிறந்தார். சார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒளியியல் மற்றும் நிறப்பிரிகைத் துறையில் அவரை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திய, அவருடைய, குறுக்கிடும் விளிம்புகள் பணிக்காக 1892ம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1904ம் ஆண்டு மார்ஸைல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். ஒளியியலில் குறுக்கிடும் விளிம்புகள் எனும் நிகழ்விற்கு விளக்கத்தைக் கண்டறிந்தார். 1899ம் ஆண்டு, தன் சக பணியாளர் ஆல்பிரட் பெரோ என்பாருடன் இணைந்து பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்தார். என்றி புவசோனுடன் இணைந்து ஓசோன் படலத்தை 1913ல் கண்டுபிடித்தார்.

1921ம் ஆண்டு, பாப்ரி பொது இயற்பியல் பேராசிரியராக சோர்போனில் நியமிக்கப்பட்டார். புதிய ஒளியியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். 1926ம் ஆண்டு ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பேராசிரியரானார். 1929ம் ஆண்டு, பிரெஞ்சு வானியல் கழகத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார். 1931ம் ஆண்டு முதல் 1933ம் ஆண்டு வரை அக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். பாப்ரி, தன்னுடைய பணிக்காலத்தில், 197 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 14 நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தன்னுடைய முக்கியமான அறிவியல் சாதனைகளுக்காக, 1918ல் இலண்டன் அரச கழகத்தின் ரம்போர்ட் பதக்கம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இவருடைய பணி அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க தேசிய அறிவியல் கழக்த்தின் ஹென்றி டிரேப்பர் பதக்கம் (1919) மற்றும் பிராங்கிளின் கல்விக்கழகத்தின் பதக்கமும் (1919) பெற்றார். 1927 ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த சார்லசு பாப்ரி டிசம்பர் 11, 1945ல் தனது 78வது அகவையில் பாரிஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!