Home செய்திகள் தனியார் பேருந்துகளின் கட்டணம் கொள்ளை ..போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்குமா

தனியார் பேருந்துகளின் கட்டணம் கொள்ளை ..போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்குமா

by mohan

மதுரையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1500 லிருந்து அதிகபட்சம் 2500 ரூபாய் வரைக்கும் டிக்கெட் விற்பதாக புகார் எழுந்துள்ளது .. ஆன்லைனில் redbus இணையதளத்தில் அதற்கான தொகையை பார்க்கும்பொழுது நடுத்தர குடும்பத்தினர் எப்படி பயணம் செய்வது என குழம்பிப்போய் உள்ளார்கள் ..வட்டார போக்குவரத்து அலுவலகம் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக இந்த கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ..

மேலும் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில்  பாதி பேருந்துகளுக்கு முறையான அனுமதி இல்லாமல் இயக்கப்படுவது ஆகும் ..திருவிழாக் காலங்களில் மற்றும் சீசன் நேரங்களில் ஸ்பேர் பஸ்ஸை எந்தவித பராமரிப்பும் இல்லாமலும் இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும்போது பயணிகளுக்கு இழப்பீடுகளை கொடுப்பது  இதற்கு பொறுப்பு ஏற்பது யார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..இதனை களைய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை உரிய ஆவணங்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகின்றனவா என சோதித்து கட்டணக் கொள்ளையில் தடுக்குமாறு பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!