Home செய்திகள் மதுரையில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப்பூங்கா. வருகிற ஜூன் 1-ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் திறப்பு விழா.

மதுரையில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப்பூங்கா. வருகிற ஜூன் 1-ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் திறப்பு விழா.

by mohan

மதுரையைப் பற்றிய குறிப்புகள் சங்ககால இலக்கியங்களில் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு செய்த இலக்கியம் சிலப்பதிகாரம்.சிலப்பதிகாரத்தையும் மதுரையும் சிறப்பிக்கும் வகையில் கடம்பு, வாகை, வாழை, மா, பலா, வேங்கை, கொன்றை, மருது, மூங்கில், இலவ மரம் என மொத்தம் 32 வகையான அன்றைய மதுரையில் எண்ணற்ற மரங்கள் எல்லாம் இருந்ததாக சிலப்பதிகாரம் சொன்னதோ, அதை எல்லாம் தேடிப் பிடித்து வைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சுமார் இரண்டு ஏக்கரில் சிலப்பதிகார பூங்காவை உருவாக்கி இருக்கிறார் மாவட்ட கண்காணிப்பாளர்  நெ.மணிவண்ணன்

மேலும், பூங்கா நுழைவு வாயிலில் சிலப்பதிகார கதைச் சுருக்கத்தையும், பூங்காவுக்குள் ஆங்காங்கே மங்கள வாழ்த்துப் பாடலில் ஆரம்பித்து வரந்தரும் காதை வரையிலான 10 காதைகளின் சுருக்கத்தையும் கல்வெட்டாக வைத்து நடுவில் பிரமாண்டமான கால் சிலம்பு சிற்பமும், பின்னணியில் கண்ணகி, கோவலன், மாதவி, சேரன் செங்குட்டுவன், கவுந்தி யடிகள், இளங்கோவடிகள் ஆகியோரின் உருவங்களையும் ஓவியமாக வரைந்து வைத்துள்ளார்.மேலும், இந்தப் பூங்காவின் திறப்பு விழா வரும் 1ஆம் தேதி எளிமையாக நடைபெறும் என்று மணிவண்ணன்கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!