Home செய்திகள் வாட்சப் மூலம் வைரலாகும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

வாட்சப் மூலம் வைரலாகும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

by mohan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் “எங்களின் நலனுக்காக போராடும் உங்களின் நலனுக்காகவும் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்” என்று வாசகங்கள் அடங்கிய தகவலை வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மாணவர்கள் சண்முகம், முத்தையன், முகேஷ் ஆகிய மூவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள்.இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி ஆவார்கள். மூன்று பேரும் கொரோனா விழிப்புணர்வு என்று தலைப்பிட்டு தகவலை பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாட்ஸ்அப் வழியாக விழிப்புணர்வு பதிவை அனுப்பி வருகின்றார்கள். அதில் அவர்கள் கூறியுள்ள தகவல் விவரம் வருமாறு :

அனைவருக்கும் வணக்கம் நாங்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறோம். என் பெயர் சண்முகம். என் பெயர் முத்தையன். என் பெயர் முகேஷ்.இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை கடைபிடிக்கும் விதமாக தொடர்ந்து நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம் . நீங்களும் வீட்டிலேயே இருங்கள் . இந்த கொடிய வைரஸிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள் .எங்கள் பள்ளியில் கைகளை கழுவும் முறையை பற்றியும் வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்கள் மாஸ்க் பயன்படுத்தும் முறையைப் பற்றியும் எங்களுக்கு விளக்கமாக கூறியிருக்கிறார்கள். உணவில் பழங்கள், காய்கறிகள் ,கீரைகள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்! தனித்திருந்து வெற்றி காண்போம் .அலட்சியம் செய்ய வேண்டாம். கண்ணுக்குத் தெரியாத வைரஸிடம் இருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று இரவு பகலாக போராடும் காவல்துறையினர் ,மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், எம் பள்ளியின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் நலனுக்காக போராடும் உங்களின் நலனுக்காகவும் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். விடுமுறையாக இருந்தாலும் எங்களின் நலனுக்காக தினமும் தொடர்பு கொண்டு எங்களின் நலன்களை விசாரித்து அறிவுரை வழங்கி வரும் எம் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி!வணக்கம்! உங்களின் நலனுக்காக அன்புடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என்று தலைப்பிட்டு அந்த மாணவர்கள் விழிப்புணர்வு தகவலை கொடுத்துள்ளனர்.

இதனையே வீடியோவாகவும் பேசி அனைவருக்கும் அனுப்பி உள்ளனர். மாணவர்களின் சமுதாய பற்றுதலும், வீட்டை விட்டு வெளியே வராமல் அனைவரையும் இருக்கச் சொல்லும் விஷயங்களும் மிகவும் வைரலாகி முகநூல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பரவி வருகிறது. இது பாராட்டுக்குரியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!