Home செய்திகள் மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் சாயும் நிலையில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் சாயும் நிலையில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

by mohan

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோடு எம்.கே.புரத்தில், (ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் எதிரில்) உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் இரும்புத்தூண் அடிப்பாகம் அரித்து பழுதடைந்து சாயும் நிலையில் உள்ளதால் அதை அகற்றி புதிய இரும்புத்தூண் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மதுரை மதிமுக பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.சேகர் மற்றும் மதிமுக மாணவர் அணி மாவட்ட செயலாளர் புகழ் முருகன் ஆகியோர் கூறியதாவது :- ஜெய்ஹிந்த்புரம் புதிய காவல் நிலையம் எதிரில், வில்லாபுரம் உப மின் நிலையத்திலிருந்து சுப்பிரமணியம் உப மின் நிலையம் செல்லும் உயரழுத்த மின் தடம் மேற்படி எனது வீட்டின் அருகில் செல்கிறது. இந்த உயர்அழுத்த மின்சாரம் செல்லும் இரும்பு கம்பம் சாயும் நிலையில் உள்ளது. வளைந்தும், துருப்பிடித்தும், எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனுக்கு வரும் 11கே.வி.ஏ சுப்பிரமணியபுரம் உப மின் நிலையத்திலிருந்து ஜெயவிலாஸ் பாலம் வரை செல்லும் மின் வழித்தட இரும்பு கம்பமும்,அதன் கிழக்கே உள்ள ஒரு மின்கம்பமும் லாரி மோதியதால் வளைந்து விழும் நிலையில் உள்ளது. மேற்படி எம்.கே புரம், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் மெயின் ரோடாக இருப்பதினால் அதிகமான போக்குவரத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகின்ற சாலையாக உள்ளது. இந்த மின் கம்பம் சாய்ந்தால் இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மேல் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக அதை மாற்றி அமைத்து, உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!