Home செய்திகள் செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 8வது பட்டயம் அளிப்பு விழா..!

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 8வது பட்டயம் அளிப்பு விழா..!

by Askar

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 8வது பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார் செல்வ நாராயண ரெட்டியார் கல்வி அரக்கட்டளை உறுப்பினர்கள் அம்பிகாபதி திலகவதி ரவிக்குமார் ரேவதி சுந்தரமூர்த்தி ஐஸ்வர்யா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்று பேசினார் விழாவை சிறப்பு அழைப்பாளராக சென்னை மற்றும் பெரம்பலுர் தனலட்சுமி சீனுவாசன் கல்வி குழும தலைவர் எ.சீனுவாசன் கலந்துகொண்டு 194 மாணவர்களுக்கு பட்டயமும் மாநில அளவில் வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற 33 மாணவர்களுக்கு ரூ.2லட்சத்து 22ஆயிரம் ரொக்க பரிசுகளும் பேராசிரியர்களுக்கு ரூ.75ஆயிரம் ஊக்கப் பரிசுகளும் வழங்கி பேசினார். அப்போது இந்த கல்லூரியில் 8ஆம் பட்டயம் அளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்;ச்சி அளிக்கிறது நான் என் பெற்றோருக்கு 8வது குழந்தையாகும் பிறந்த 10 மாதத்தில் தாயையும் 12மாதத்தில் தந்தையையும் இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்டேன் இன்று 23 கல்வி நிருவனங்கள் உருவாக்கி இருப்பது எனது திறமையால் அல்ல இறைவன் அருள் பெற்றோர் ஆசி ஆகும் பாலிடெக்னிக் படிக்கிரோம் என்று மாணவர்கள் தாழ்வாக நினைக்க கூடாது பொறியியல், பி.எச்.டி படித்தவர்களை விட அதிகம் பாலிடெக்னிக் படித்தவர்கள் சம்பாதிக்கிறார்கள் ஒரு ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எ.எஸ் படிக்கிற மனோநிலை தன்னம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கவேண்டும் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தாய்தந்தையின் வாழ்த்து மற்றும் ஆசியை மாணவர்கள் பெறவேண்டும் நன்கு படித்து முன்னேறி பெற்றோருக்கும் கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என பேசினார் கல்லூரியில் சூரிய மித்ரா மத்திய அரசு சான்றிதழ் திட்டத்தின்கீழ் 3மாத இலவச பயிற்சி பெற்ற 90 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கடலூர் கிருஷ்ணசாமி கல்வி குழும செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் பேசினார். ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் விழாவினை தொகுத்து வழங்கி பேசினார். முடிவில் ஆங்கில விரிவுறையாளர் அலெக்ஸ்சாண்டர் நன்றி கூறினார் விழாவில் தனலட்சுமி சீனுவாசன் கல்வி குழும செயலாளர் நீல்ராஜ் நிர்வாக அலுவலர் மௌலி புதுப்பாளையம் ஒன்றிய குழு துணைத்தலைவர் சசிகலா உதயசேகரன் கெங்கம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் உதயசேகர் மல்லவாடி சாய் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சோமசுந்தரம் மணிகண்டன் திருவண்ணாமலை மகாதீபம் குணசீலன் ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் ரவிச்சந்திரன் ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் பேராசரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!