நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மதிமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதிமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஒன்றியம் செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் துரைச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது. தமிழகத்தில் கூடிய விரைவில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவினர் கடுமையாக உழைத்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடைபெறும் தேர்தலில் நிச்சயமாக திமுக கூட்டணி மக்களின் ஆதரவோடு இருபது தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பது  முகவர்கள் எழுச்சியை பார்க்கும்போது உறுதி செய்யப்பட்டது. இதற்காக மதிமுகவினர் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருள்சாமி, கழக கொள்கை விளக்கக் செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய நிர்வாகிகள் கஜேந்திரன்,, பாண்டியன், நகர நிர்வாகிகள் மருது ஆறுமுகம், ஜெய ரஜினி, பெரியசாமி, முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிலக்கோட்டை பேரூர் செயலாளர் பாண்டி நன்றி தெரிவித்தார்.
செய்தி:- நிலக்கோட்டை ராஜா