Home செய்திகள் ராமநாதபுரம் அருகே மண்டல பூஜை: ஐயப்ப பக்தர்கள்பேட்டை துள்ளல்

ராமநாதபுரம் அருகே மண்டல பூஜை: ஐயப்ப பக்தர்கள்பேட்டை துள்ளல்

by mohan

இராமநாதபுரம் அருகே ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலய பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் (நவ.17) மாலை அணிந்து சபரிமலை யாத்திரை செல்ல விரதம் மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து தினமும் பூஜை, சிறப்பு ஆராதனை நடந்தன. இக்கோயில் மண்டல பூஜை விழா டிச. 18ல் முகூர்த்த கால் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மண்டல பூஜை நாளான இன்று அதிகாலை கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ரெகுநாதபுரம் முத்து நாச்சிஅம்மன் ஆலயத்தில் பக்தர்கள் ஒருமித்த எண்ணத்துடன் முகம், உடல் பகுதிகளில் வண்ணப் பொடி பூசி ஆடிப்பாடி வல்லபை ஐயப்பன் ஆலயத்தை வந்தடைந்தனர் இதனை தொடர்ந்து ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் பின்புறமுள்ள பஷ்மக் குளத்தில் வல்லபை ஐயப்பனுக்கு பால், மஞ்சள், விபூதி பன்னீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் செய்து ஸ்ரீ வல்லபை ஐயப்பன் உற்சவரைபக்தர்கள் பல்லக்கில் சுமந்து ஆலயத்தை அடைந்தனர். அங்கு ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு 26 வகை திரவிய அபிஷேக, ஆராதனை நடந்தன. இதில் வல்லபை ஐயப்பன் அன்னதான பிரபுவாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com