Home செய்திகள் பெரிய கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள செல்லாண்டம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பெரிய கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள செல்லாண்டம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்லாண்டம்மன் திருக்கோவில்.,பெரியகட்டளை பி.செட்டியபட்டி பி.பாலார்பட்டி உள்பட ஆறு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலை புரணமைப்பு செய்து கோபுரம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., நேற்று துவங்கிய யாகசாலை பூஜைகள் 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.,அதேபோல் சுவாமிக்கு 16 வகையான அபிஷேக தீபாரதனை செய்யப்பட்டு, இறுதியாக இன்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.,தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.,பின்னர் சுற்றி இருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.,இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்ப்பாடுகளை பெரியகட்டளை 5 பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர்கள் செய்திருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com