மக்களுடன் முதல்வர் திட்டத்தை சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேஷன் துவக்கி வைத்தார்:

மக்களுடன் முதல்வர் திட்டத்தை சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேஷன் துவக்கி வைத்தார்:

மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள அப்பர் மேல்நிலைப் பள்ளியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் தலைமையேற்று, மக்களுடன் முதல்வர் திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி மணிமாறன், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி மற்றும் சுந்தரசாமி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கயல்விழி, சுரேஷ்குமார், துணைத் தலைவர் வீரய்யா, ஒன்றியக் கவுன்சிலர் மல்லிகா ஆனந்த் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி, ஊராட்சி பணியாளர்கள், தி.மு.க கிளைச் செயலாளர் திருமாறன், பொதுமக்கள் மற்றும் 29 துறைகளை சார்ந்த அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம்