இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேருசிலையில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் திடல் வரை சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் ஒழிப்பு ,மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
பேரணியை இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி கொடிய அசைக்க துவங்கி வைத்தார் இந்த பேரணியில் காவல்துறை சேர்ந்த காவலர்கள் சீருடை உடன் கலந்து கொண்டனர் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட இருசக்கர விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 450-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன..
செய்தியாளர், வி. காளமேகம்
You must be logged in to post a comment.