மக்கள் டீம் பதிவு செய்த அமைப்பின் முதல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..

கீழக்கரையில் பல்வேறு சமூக நல அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மக்கள் டீம் அமைப்பு செயல்பட்டு வந்தாலும் சமீபத்தில் முறையாக அரசு பதிவை பெற்று முதல் நிர்வாக கூட்டம் இன்று (25/07/2021) மாலை குத்பா பள்ளி வளாக மேல் மாடியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட நபர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: ஜகுபர் அலி உப தலைவர் : முகம்மது அப்துல் காதிர் ( ஹாஜி ) செயலாளர் : மக்கள் டீம் காதர் பொருளாளர் : அகமது ஃபாய்ஸ் இணை செயலாளர்: அயூப்கான் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக.. ரமீஸ் கான் முகைதீன் காதர் சாகிபு ( அ.மு ) சீனி முகமது கஸ்ஸாலி அசன் அப்துல் காதர் தங்கராஜ் முகம்மது ரபீக்.

மேலும் இக்கூட்டத்தில்  நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், புதிய உறுப்பினர் சேர்க்கை, நகர் முக்கிய பிரமுகர்களை அழைத்து பொதுமக்கள் அறிமுக கூட்டம் அத்துடன் அரசு பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களை கௌரவப்படுத்துதல், உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.