Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் கருத்தரங்கம்..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் கருத்தரங்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் கருத்தரங்கம் பரமக்குடியில் இன்று 11-7-2019 நடைபெற்றது. இளையான்குடி ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் ஜான் சேவியர் பிரிட்டோ வரவேற்புரை ஆற்றினார். இன்றைய தமிழ்ச்சமூகமும் இளைஞர்களும் என்கின்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிவியல் நகரத்தின் துணை தலைவர் நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் சகாயம் இ.ஆ.ப கூறுகையில் தமிழ்ச்சமூக மாற்றத்திற்கான பயணத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்காற்ற வேண்டுமென்றும், இலஞ்சம் ஊழலை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றும், நேர்மையை மக்கள் அங்கீகரிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்றும், சுதந்திரதினத்தன்று கிராமசபையில் இளைஞர்கள் அதிகமாக கலந்து கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி தமிழ்ச்சமூக மாற்றத்தில் மக்கள் பாதையின் அவசியத்தை பற்றியும், மக்கள் பாதையின் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்து சமூக விழிப்புணர்வு பரப்புரை பயணத்தையும் , ஒன்றிய பொறுப்பாளர்கள் கிராமசபைகளில் கலந்து கொண்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த கருத்தரங்க நிகழ்விற்காக சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இணை ஒருங்கிணைப்பாளர் இராவணன்குமார் பேசுகையில் , தமிழர் அறம், வீரம், இயற்கை மருத்துவம், ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். மேலும் மக்கள் மருந்தகங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயண்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் கோகிலா அவர்கள் நேர்மையாளர் பற்றியும், சமூக மாற்றத்தை பற்றியும் எடுத்து கூறினார். கமுதி ஒன்றிய பொறுப்பாளர் யோகேஷ்வரண் கலந்து கொண்டு ஐயாவின் பல பணிமாறுதல்கள் பற்றியும் அவை அனைத்தும் விருதுகள் என்றும் புகழாரம் சூட்டினார்.

இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கவி சாலினி , தினேஷ் குமார், நூருல் அமீன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் மக்கள் பாதை மாநில செய்தி தொடர்பாளர் பாட்சா, மாநில திடல் திட்ட ஒருங்கிணைப்பாளர் கஷ்மீர், மாநில படிக்கட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன் , இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை மாவட்ட, திட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட திடல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றியுரை கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!