Home செய்திகள் மக்கள் பாதை சார்பாக மாபெரும் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

மக்கள் பாதை சார்பாக மாபெரும் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று 05-05-2019 இராமநாதபுரத்தில் நடைபெற்றது. நயினார்கோயில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை தாங்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்து அனைத்து ஒன்றியங்களிலும் சட்ட விழிப்புணர்வு பயிற்சியை கொண்டு செல்வதற்கான வழிமுறையை எடுத்துக் கூறினார். இராமநாதபுரம் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை சட்டங்கள், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாம் எவ்வாறு சட்டங்களை உபயோகிப்பது , பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பதை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறி சிறப்புரை ஆற்றினார். மேலும் இளைஞர்களின் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கும் சிறப்பான விடைகளுடன் நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் நிறுவனர் கலைவானி கலந்து கொண்டு சட்டங்களை சந்திப்போம் எனும் தலைப்பில் சர்வதேச அளவில் நிகழக்கூடிய குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை பற்றியும் குழந்தைகளுக்கான அடிப்படை சட்டங்கள் என்ன என்பதை பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துக் கூறினார். மேலும் பெண்களுக்கான சொத்துரிமை பற்றியும் எடுத்துரைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி நம்பிக்கை உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மேற்கு சென்னை துணை ஒருங்கிணைப்பாளர் காசிநாததுரை மற்றும் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

மேலும் இந்த பயிற்சி முகாமில் மாவட்ட மானுடம் திட்ட பொறுப்பாளர் சசி , மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர், திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர்கள் மாதவன்,கிளாட்வின் , இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர் அருளானந்தபிச்சை , இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ராமு , தேவிபட்டிணம் ஊராட்சி பொறுப்பாளர் உலகுராஜ் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் நன்றியுரை கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!