Home செய்திகள் சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில்,  தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..

சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில்,  தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..

by Askar

சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில்,  தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..

சென்னையில் பயிற்சி பெற்று வரும் இளம் வழக்கறிஞர் பிரஷாந்த் கே.பிரகாஷ்  தொடங்கியுள்ள சௌராஷ்டிர பாரம்பரிய மன்றத்தின் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமானது, சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல்களை கர்நாடக இசை மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கர்நாடக சங்கீத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் கச்சேரிகளில் குறைந்தது ஒரு சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல் இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கை போன்று சௌராஷ்டிர மொழியையும் ஒரு இசைக்கான மொழியாக முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனை மீட்டெடுப்பதற்கான புதிய முயற்சியாக இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை டி.ஆர்.துளசிதாஸ்  தலைமையேற்று நடத்த, மதுரை ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் நிறுவனர் டி.ஆர்.பிரகாஷ் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் செயலாளர் டி.ஆர்.மோஹன்ராம் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார் மேலும், பாபநாசம் ஸ்ரீ ஆர்.குமார், தோப்பூர் டாக்டர்.பி.சாய்ராம் பாலமதி ஆகிய மூத்த இசை கலைஞர்களும், கீர்த்தனா, ஸ்ரீ கிஷோர் ஆகிய வித்துவான்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com