Home செய்திகள்உலக செய்திகள் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி..

போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி..

by Abubakker Sithik

போதைப் பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

பத்தாண்டுகளில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமல், ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. மதுரை எம்பி.சு. வெங்கடேசன் பேட்டி.

மதுரை பசுமலை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியின் 29ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி.சு. வெங்கடேசன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அப்போதே நாங்கள் கூறி இருந்தோம் தேர்தல் ஏப்ரலில் வருவதால் இவர்கள் மார்ச் என்று சொல்கிறார்கள். இதுவே டிசம்பர் மாதம் வந்தால் அக்டோபர், நவம்பரில் துவங்கும் என்று அறிவிப்பார்கள் என்று கூறியிருந்தோம். அதேபோல் மார்ச் மாதம் வேலை துவங்கும் என்றால் அந்த வேலைகள் நடைபெறுவதற்கான பார் சாட் என்று அழைக்கப்படும் எந்தெந்த மாதங்களில் எந்த வேலைகள் நிறைவு பெறும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய பார் சாட் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தோம் இப்போது வரை அதை தரவில்லை. எந்தெந்த கட்டங்கள் வேலை நடைபெறும் என்கிற அந்த பார்சாட்டை வெளியிட்டால் தான் மக்கள் நம்புவார்கள் இல்லையென்றால் இது தேர்தல் நடக்குமாகத்தான் பார்க்கப்படும்.

ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பத்து நாட்களுக்கு பயன்படுவதற்காக மத்திய அரசு அனுமதியும், அங்கீகாரத்தையும் அளித்துள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக நானும் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளேன். மோடியின் தொகுதியான வாரணாசி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் ஆக்கியுள்ளனர். அங்கு வரக்கூடிய பயணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகம் பிடிபடுவது குறித்த கேள்விக்கு:

தமிழக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே போதைப் பொருள் புழக்கம் மற்றும் விநியோகிக்கின்ற வலை பின்னல் போன்றவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்ராகார்க் தென்மண்டல ஐஜியாக இருந்த போது, பிடிபட்ட போதைப் பொருட்களை பாராட்டி நான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் கோடிக்கணக்கான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது மூடி மறைக்கப்பட்டுள்ளது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளேன். மாநில அரசும் மத்திய அரசும் மிகக் கூடுதல் கடுமையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலுக்காக தென் மாவட்டங்களுக்கு திட்டங்களும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு:

இது வெறும் அறிவிப்பு தான். இரண்டு வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புக்கு, மக்களின் கண்ணீருக்கு நியாயம் வழங்குங்கள். மூன்று அமைச்சரவை சார்பாக குழுக்கள் தனித்தனியாக வந்து ஆய்வு செய்தார்கள் ஒன்றிய அமைச்சர் வந்த ஆய்வு செய்தார் அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தார்கள் என்று மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் நீதி கொடுக்கவில்லை என்று தெரிவிக்க பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா.

தொடர்ந்து மோடி தமிழகம் வருவதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலா என்ற கேள்விக்கு:

மோடி ஐந்து முறை வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை முறை வந்தாலும் அவரை தமிழக மக்கள் திருப்பி அனுப்புவார்கள் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!