Home செய்திகள்உலக செய்திகள் மதுரையில் பெண்களிடம் வழிப்பறி; இளைஞர்கள் இருவர் அதிரடி கைது..

மதுரையில் பெண்களிடம் வழிப்பறி; இளைஞர்கள் இருவர் அதிரடி கைது..

by Abubakker Sithik

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தனியாக செல்போன் பேசி செல்லும் பெண்களிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.

மதுரை மாநகர் அவனியாபுரம் அருகே உள்ள CSA ஆலை பெரியசாமி நகர் முன்பு கடந்த மாதம் 21-ஆம் தேதி மதியம் வைத்தீஸ்வரி என்ற பெண் செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர். தொடர்ந்து அன்று இரவு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியிலும் இதே போன்று தனியாக நடந்து சென்ற பெண்ணின் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். ஒரே நாளில் 2 வெவ்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற நிலையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதனை தொடர்ந்து 23-ஆம் தேதி தல்லாகுளத்திலும், 24-ஆம் தேதி கூடல்புதூர் என அடுத்தடுத்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட பெண்களிடம் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்கள் என்பது போலீசார் விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.

மேலும் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது விலையுயர்ந்த R15 பைக் என்பது அதே பைக்கை பயன்படுத்தி அடுத்தடுத்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது. அந்த வாகனத்தின் எண்னை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் வாகனத்தில் சென்ற போது அதே எண் கொண்ட R15 பைக்கை 2 இளைஞர்கள் ஓட்டி சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்ற பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்த அக்கொள்ளையர்கள் டூவீலரை வேகமாக ஓட்டிச் செல்ல அவர்களை பின் தொடர்ந்து மடக்கி பிடித்த தனிப்படை உதவி ஆய்வாளர் மஞ்சமலை பாண்டியன் மற்றும் ராம்பிரசாத் ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் கம்பம் அருகே கேகே பட்டியை சேர்ந்த வீரரகு என்பவரது மகன் ஹரிபிரசாத் (22) என்பதும், மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் வீரக்கார்த்தி (24) என்பதும் தெரிய வந்தது. ஹரிபிரசாத் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வரும் பொழுது வீரகார்த்திக்குடன் கஞ்சா அடிப்பதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 5க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!