Home செய்திகள் திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு..

திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு..

by syed abdulla

திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு – அதில் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஐந்துகள் தஞ்சம் அடைவதாகவும், மக்கள் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட நியாய விலை கடை செயல்பாடின்றி வீணடிக்கப்பட்டுள்ளாதாகவும், கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும் கிராம மக்கள் சரமாரி குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கிழவனேரி கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இடிந்த நிலையில் செயல்பாடின்றி இருப்பதால் , அதில் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்து இருப்பதாலும், அந்த சுகாதார வளாகத்தை பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாமல், கிராமத்தில் உள்ள கண்மாய் உள்ளிட்ட வெற்றிடங்களுக்கு செல்லும் நிலை இருந்தபோதிலும், தற்போது அங்கும் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயற்கை உபாதைகளை கூட பெண்கள், குழந்தைகள் கழிக்க முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்த மக்கள் ,
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நியாய விலை கடை , கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடின்றி இருப்பதுடன், கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நியாய விலை பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் வழி இருப்பதால் ,
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற சாவடியில் நியாய விலை கடை இயங்குவது மிகுந்த வேதனைக்குரிய செயலாகவும், அக்கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் இன்றி, நோய் தொற்று பரவும் நிலை இருப்பதாகவும் தெரிவிக்கும் கிராம மக்கள்,
இக்கிராமம் அத்திப்பட்டி போன்றுள்ளது மிகுந்த வேதனை தரும் கிராமமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்தால், கிராம மக்களிடமே ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கழிப்பறையை சரி செய்து தருவதாக தெரிவித்ததால் செய்வதறியாது தவித்த அக்கிராம மக்கள் , தமிழக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com