Home செய்திகள் மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையபோட வந்த முதியவர், கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பு..

மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையபோட வந்த முதியவர், கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பு..

by syed abdulla

மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையபோட வந்த முதியவர், கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பு..

மதுரை அருகே சூறாவளிமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் திருப்பரங்குன்றத்தில் மேற்கு ரத விதியில் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

தனது கடைக்கு தண்ணீர் பிடிப்பதற்காக டிசம்பர் 27-அம் தேதி காலை வெளியே சென்று உள்ளர். அப்போது மணிகண்டன் பேக்கரி கடைக்கு வந்த ஒரு முதியவரை பார்த்து தங்களுக்கு எதும் வேண்டுமா என கேட்க அதற்கு முதியவர் ஒன்று வேண்டாம் தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்கிறேன் என் கூறியுள்ளார்.

முதியவர் தண்ணீர் குடிக்க வந்தாக தெரிவிக்க மணிகண்டனும் தனது பேக்கரிக்கு தேவையானை தண்ணீர் பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். கடையின் கல்லா திறந்து இருப்பதை அறிந்த முதியவர்  கல்லாவில் கையை விட்டு 2000 பணத்தை எடுத்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல கடையை விட்டு வெளியே சென்று உள்ளார்.

தொடர்ந்து தனது வேலையை முடித்துவிட்டு கல்லாவில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்த்த மணிகண்டனுக்கு 2000 ரூபாய் குறைந்தது தெரியவந்தது. மேலும் கடையில் உள்ள சிசிடிவி பார்த்தபோது தண்ணீர் குடிக்க வந்த முதியவர் கடையின் கல்லாவில் கை விட்டு 2000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது சிசிடிவி தெளிவாக பதிவாகி இருந்தது.

உடனடியாக மணிகண்டன் திருப்பரங்குன்றம் ககாவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் CCTV காட்சிகளை வைத்து 2000 பணத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை எதுவும் தெரியாதது போல் மறுபடியும் அந்த முதியவர் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரிக்கு கடைக்கு வந்து உள்ளர். அப்பொழுது கடை உரிமையாளர் மணிகண்டன் கடந்த 27ஆம் தேதி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது இவராக இருக்குமோ என சந்தேகத்தில் போலீசாருக்கு தகவலளித்தார்.

கடைக்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்த போலீசாரை கண்ட முதியவர் கடந்த மாதம் கல்லாப்பெட்டியில் இருந்து 2000 ரூபாய் பணத்தை திருடியது நான் தான் என கூறவே., அவரை காவல்நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவர் திருநகரை சேர்ந்த 52 வயதான பத்பநாமன் என்பது தெரியவந்தது. பத்மநாபனை கைது செய்த போலீசார் இது போன்ற வேறு ஏதும் கடைகளில் திருடி உள்ளாரா என விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையை போடவந்த முதியவரை கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர், வி .காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!