Home செய்திகள் திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..

திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..

by Askar

திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..

மதுரை நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் வீட்டார் போல் நுழைந்து , அங்கிருந்து மணமக்கள் அறைக்குள் புகுந்து நகைகளை திருடிய நபரை மணமக்கள் வீட்டார் பிடித்து தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இத் திருடன் மதுரை புது மாகாளிப்பட்டி சாலையில் பீட்டர் மகன் வில்லியம் (வயது 42 ) தையற் தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. திருடன் வில்லியம் கடந்த மாதம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருணாச்சலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நுழைந்து அங்கிருந்த மணமக்கள் உறவினர் லட்சுமி என்ற பெண்ணின் கைப்பையிலிருந்த 3 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளதை, அங்கிருந்த சிசிடிவி கேமரா-வில் பதிவானதை வைத்து, தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,
மீண்டும் அதே திருமண மண்டபத்தில் அதே திருடன் வந்து, கைவரிசை காட்ட முயற்சித்த போது, அவனது புகைப்படத்தை ஏற்கனவே வீடியோ வைரல் ஆனதை வைத்து, அங்கிருந்த மணமக்கள் உறவினர்கள் வில்லியத்தை கையும், கனவுமாக பிடித்து, அவனது கைகளை கட்டி தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இத்திருடன் திருமண மண்டபங்களை மட்டுமே குறிவைத்து, மணமுடிக்கும் நேரத்தில் அனைவரின் கவனமும் மணமேடையில் இருக்கும் தருணத்தில் தனது கைவரிசையை காட்டுவது தொடர்கதையாகி வந்த நிலையில்,
தற்போது சிசிடிவி காட்சியை வைத்து நகை திருடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட வில்லியத்திடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வில்லியத்திற்கு திருமண மண்டபங்களில் உள்ள ஊழியர்களிடம் தொடர்புகளை வைத்துக்கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com