விடுமுறை நாட்களை கொண்டாட போதிய பொழுதுபோக்கு இடங்கள் இல்லை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..
மதுரையில் பொழுது போக்குவதற்கு இடமே இல்லை. அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் சில பூங்காக்கள் மட்டும் உள்ளன அதற்கும் நுழைவு கட்டணம் இருக்கிறது. ஆனால் நுழைவு கட்டணம் இல்லாமல் இயற்கை காற்றை சுவாசித்து குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கு சிறந்த இடம் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு எப்பொழுதும் மாலை நேரங்களில் குடும்பத்தினர் வந்து பொழுதுபோக்குவார்கள். விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அவ்வளவு மக்கள் கூட்டம் இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக நேற்று மாலை 6 மணி அளவில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடினார்கள். இங்கு குழந்தைகளுக்கு காண பொழுதுபோக்கு அம்சமாக ராட்டினங்கள் உணவகங்கள் இன்னும் ஏராளமான கடைகள் இருப்பதால் அனைவரும் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர் என
சமூக ஆர்வலர் ஓகே சிவா தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.