Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யா பேரரசு-11 (கி.பி.661-750)

முஸ்லீம்களின் தளபதி உக்பா அவர்களுக்கு கடற் கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பது தெரியும்.

ஆகவே கடல் கொள்ளை நடக்கும் பிராந்தியம் வரை டமாஸ்கஸ் செல்லும் பரிசு கப்பலுக்கு துணையாக கொஞ்சம் இடைவெளிவிட்டு,

ஐந்து கப்பல்களை முன் எச்சரிக்கையாக தளபதி உக்பா அனுப்பி இருந்தார். குறிப்பிட்ட கொள்ளையர்களின் எல்லை தாண்டியதும் திரும்பி விட உத்தரவிட்டு இருந்தார்.

ஆகவே பின்னால் சென்ற கப்பல்கள், தங்கள் பரிசுக்கப்பல் கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்படுவதை, கொள்ளையர் கப்பலின் மேல் பறந்த கொடியை அடையாளம் வைத்து புரிந்து கொண்டனர்.

அந்த இருள் சூழ்ந்த இரவில் வானத்தில் நிலவே இல்லை. தேய்பிறையின் கடைசி நாட்கள். கடல் பகுதியே முழு இருளால் போர்த்தப்பட்டு இருந்தது. இந்த துணைக் கப்பல்களின் தளபதி காலீத் ஒரு தந்திரம் செய்தார். ஐந்து கப்பல்களில் இருந்தும் சுமார் ஐம்பது படகுகளை கீழிறக்கி ,

ஒவ்வொரு படகிலும் நான்கு வீரர்களை வைத்து படகுகளை தூர தூரமாக கொள்ளை கப்பல்களை நோக்கி நிற்க வைத்து ஒரு சமிக்ஞை செய்து ஒரே நேரத்தில் படகுகளில் புகை போட வைத்தார்.

பிறகு திடீரென்று ஒரே நேரத்தில் வானத்தில் எறி அம்புகளை நெருப்பு சுடரோடு வீச வைத்தார்.

காற்று கொள்ளையர்கள் கப்பலை நோக்கி வீசியதால் ஒரே நேரத்தில் நெருப்பு அம்புகளும், புகைகளும் கிளம்பியதால்

ஏதோ பெரிய படை ஒன்று தம்மை சுற்றி வளைக்க வருவதாக நினைத்த கொள்ளையர் கப்பல்கள் பயந்து அவர்களின் இருப்பிடங்களை நோக்கி ஓடின.

ஆபத்து நீங்கியதால் பரிசு கப்பல் டமாஸ்கஸை நோக்கி பயணித்தது.

தளபதி காலீத் அவர்களின் புத்தாலித்தனமான செலவும் சேதமும் இல்லாத இந்த தந்திரமான போர்முறையால் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினர்.

பாதுகாப்பு கப்பல்கள் ஐந்தும் சைப்ரஸ் தீவின் துறைமுகத்திற்கு திரும்பி துறைமுகத்தில் தங்கள் கப்பல்களோடு இணைந்து கொண்டன.

உப தளபதி காலீத் அவர்களின் தந்திரத்தை அறிந்த தளபதி உக்பா அவர்கள் பெரிதும் அவரை பாராட்டினார்கள்.

பரிசுக்கப்பல் துறைமுகத்தை அடைந்து கலீபா முஆவியா (ரலி) அவர்களின் பொது கருவூலத்திற்கு (பைத்துல் மாலுக்கு) பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

முஆவியா (ரலி) அவர்கள் ஐரோப்பாவில் முஸ்லீம்கள் கால் பதித்தததை அறிந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்.

அதனை மக்களிடையே அறிவித்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட உமைய்யா முஸ்லீம் ஆட்சியின் பரவலை திட்டங்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள ஜும்மா மசூதியை வந்தடைந்தார்.

அங்கு உமைய்யாக்களின் வரலாறு மக்களிடம் பேசப்பட்டு வருவதை அறிந்த முஆவியா (ரலி) அவர்களும் அமைதியாக அமர்ந்து தங்கள் வரலாற்றை செவியுற ஆரம்பித்தார்.

முஆவியா (ரலி) அவர்களின் தாயாரின் ஒரு சம்பவத்தை மௌலானா அவர்கள் விவரிக்க முஆவியா (ரலி )அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!