Home செய்திகள்மாநில செய்திகள் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அரோகரா கோஷம் முழங்க தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அரோகரா கோஷம் முழங்க தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

by syed abdulla

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அரோகரா கோஷம் முழங்க தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தெப்பத் திருவிழாவானது இன்று முதல் 21.01.2024 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து., மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து முருகப்பெருமானுடன் தெய்வானை புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் முன்னிலையில் தங்கமலம் பூசப்பட்ட கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் மற்றும் புனித நீர் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து., கொடி மரத்தில் மாஇலை, தர்ப்பைப்புல் ஆகியவை வைத்து கட்டப்பட்டு 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கோவில் கொடி மரத்திற்கும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கும் மகா தீபாரதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இருபதாம் தேதி சனிக்கிழமை தை கார்த்திகை என்று காலை 8 மணிக்கு தெப்ப மூட்டு தள்ளுதலும் ரத வீதிகளில் சிறிய வைரத்தை வலம் வருதலும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுப்ரமணியசாமி தெய்வானையுடன் தெப்பத்திற்கு எழுந்தருளும் நிகழ்வும் மாலை 6 மணிக்கு தெப்ப மைய மண்டபத்தில் பக்தி உலாவிற்கு பின் ஏழு மணி அளவில் சுவாமி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்வும் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவின் போது சூரசம்ஹார லீலையும் நடைபெற உள்ளது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு காலை மாலை ஆகிய இரு வேலைகளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com