Home செய்திகள்உலக செய்திகள் பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..

பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..

by Abubakker Sithik

பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி பங்களா. இங்கு செல்லையா மகன் மூர்த்தி என்ற பங்களா C.மூர்த்தி என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் செட்டியார் மகன் ராமச்சுந்திர மூர்த்தி என்பவரிடமிருந்து 47 சென்ட் இடத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பெயரில் வாங்கி அனுபவித்து வந்த நிலையில், அதில் உள்ள 14 சென்ட் இடத்தை தனது அனுமதி இல்லாமல் பரவை பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சியின் பெயரில் மாற்றி இருப்பதாகவும், இதற்கு பரவை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளர் உடந்தையாக இருந்ததாகவும், மதுரை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கச்சை கட்டி பிரிவு சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பதாகவும், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும், அரசுக்கு வருமான வரி கட்டும் தகுதி வாய்ந்த நபராக இருந்து வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை கோபுர வாசல் சொக்கப்பநாயக்கன் தெருவில் வசிக்கும் சொக்கலிங்க செட்டியார் மகன் ராமசுந்தரமூர்த்தி என்பவரிடமிருந்து பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் சுமார் 47 சென்ட் இடத்தை கிரையம் பெற்று தனது பாத்தியத்தில் அனுபவித்து வந்ததாகவும், அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து வந்திருப்பதாகவும், இந்த நிலையில் அதிசயம் தீம் பார்க் உரிமையாளர் சென்ட்ரல் மணி என்பவர் தனது இடத்திற்கு பொதுப்பாதை வேண்டி இரண்டாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றத்தால் கமிஷன் நியமிக்கப்பட்டு கமிஷன் அதிகாரிகள் பேரூராட்சிக்கு உட்பட்ட தீம் பார்க் அருகில் உள்ள எனது 47 சென்ட் இடத்தை பார்வையிட்டு அதில் 23 அடிபாதை விட்டு விட வேண்டும் என்றும், மீதி இடத்திற்கு அளவு கல்நட்டு நான் அனுபவித்துக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு நகலில் அதிசயம் தீம் பார்க் ஜென்ரல் மணி என்பவரின் மேனேஜரும் கையொப்பமிட்டுள்ளார். இந்த நிலையில் மேற்படி இடம் நாளது தேதி வரை என்னுடைய பராமரிப்பிலும் பொறுப்பிலும் இருந்து வந்தது. அந்த நிலத்திற்கு வரியும் முறையாக எனது பெயரில் இதுவரை கட்டி வருகிறேன். இந்த நிலையில் எனது பெயரில் உள்ள 47 சென்ட் இடத்தின் ஒரு பகுதியான 14 சென்ட் இடத்தை எனக்கு தெரியாமலும், எனது ஒப்புதல் இல்லாமலும், கடந்த 12 5 2023 நாலது தேதியில் பரவை பேரூராட்சி நிர்வாகம் தனது பெயருக்கு மாற்றி உள்ளது. பட்டா மாற்றுவது சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. எனது ஒப்புதலையும் பெறவில்லை. என்னுடைய இடத்தை எனக்கே தெரியாமல் எப்படி பிரித்தார்கள் என்றும் தெரியவில்லை. நான் ஏற்கனவே பொது பாதைக்கு முறையான இடம் கொடுத்த பின்பும் அதிசயம் தீம் பார்க் உரிமையாளர் சென்ட்ரல் மணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரூராட்சி அதிகாரிகளின் துணையுடன் எனது பெயரில் உள்ள இடத்தை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாற்றி இருப்பதாக சந்தேகிக்கிறேன். ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முறைகேடாக எனது இடத்தை பெயர் மாற்றம் செய்த பேரூராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எனது இடத்தை எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!