மதுரை வலையங்குளம் நான்கு வழிச்சாலையில் குறுக்கே புள்ளி மான்கள் பாய்ந்து ஓடியதில் நிலை தடுமாறி இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு சக்கர வாகனம் மோதியதில் மானுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மதுரை வளையங்குளம் நான்கு வழி சாலையில் பால்ராஜ், சேகர், இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று இரண்டு புள்ளிமான்கள் குறுக்கே பாய்ந்து ஓடி வந்ததால் அதிர்ச்சி அடைந்த இருவரும் நிலை தடுமாறி புள்ளிமான் மீது மோதி கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்ப்பட்டது. மான் மோதியதில் காயம் அடைந்த பால்ராஜ் சேகர் இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வாகனம் மோதியதில் ஒரு புள்ளி மானுக்கும் காயம் ஏற்பட்டது அந்த புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தப்பிய ஓடிய மற்றொரு புள்ளி மானையும் மதுரை வன அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.