அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தேசியத் துணைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவன் தேர்வு செய்யப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் மற்றும் தேசிய துணைத்தலைவராக உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பிவி கதிரவன் கலந்து கொண்டு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் எம்எல்ஏ கதிரவன், தமிழ்மாநில நிரந்தர பொதுச் செயலாளராக என்னை தொடர்ந்து நீடிக்கவும், தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் அனைத்திற்கும் எனக்கு அதிகாரம் அளித்தது மத்திய கமிட்டி. டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்கிடவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எங்களுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும். அதற்கு உறுதியளிக்கும் கட்சியுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம் என பேட்டி அளித்தார். இதில் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.