Home செய்திகள் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு..

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு..

by Askar

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு..

 மத்திய பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் காவிக் கொடி கட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டம் ராணாபூரில் அமைந்து இருக்கும் தப்தலை என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவாலயத்தில் மேல் ஏறிய சிலர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டே காவிக்கொடியை கட்டினர்.

நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவாலாயம் மீது காவிக்கடி கட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தேவாலாய போதகர் நர்பு அமலியா கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருந்த போது திடீரென வந்த சுமார் 25 பேர் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் தேவாலயத்திற்குள் நுழைந்தனர்.

சிலர் காவிக்கொடியுடன் தேவாலயம் மீது ஏறினார்கள். வந்திருந்த அனைவரும் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்களை எனக்கு நன்கு தெரியும். இப்படி செய்வது நல்லது இல்லை என்று கூறினேன். ஆனால் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இதற்கு முன் இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை” என்றார்.

தேவாலாயத்தில் ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “தேவாலயம் இருப்பது தனி நபர் ஒருவருக்கு சொந்தமான வீடு. இது தேவாலயம் இல்லை. பிரார்த்தனைக்காக அவர் பயன்படுத்தி வருகிறார். எனவே தான் நாங்கள் இதுதொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை.

அந்த நபர் புகார் அளிக்கவும் விரும்பவில்லை” என்றனர். ஆனால், இதை மறுத்துள்ள மதபோதகர் அமலியார், இது என் வீடு இல்லை என்றும் தேவாலயம் தான். 2016 ஆம் ஆண்டு வாங்கினேன். ஞாயிற்றுகிழமைதோறும் 30 – 40 பேர் வந்து பிரார்த்தனை செய்வாரகள். இது வழிபாட்டு தலம்தான். இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மன்னிப்பு கேட்டதால் நான் புகார் எதுவும் அளிக்கவில்லை” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!