Home செய்திகள்கீழக்கரை செய்திகள் எல்லை தாண்டி மீன்பிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர் 6 பேர் கைது..

எல்லை தாண்டி மீன்பிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர் 6 பேர் கைது..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன 23 – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர் 6 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 480 விசைப்படகுகள் மீ பிடிக்க நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. நேற்று இரவு 8 மணி வரை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இவர்கள், இலங்கை கடற்படை ரோந்து வந்து சென்ற பின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகளை சுற்றி வளைக்க முயன்றபோது 2 படகுகளில் இருந்த 6 பேர் மட்டும் பிடிபட்டனர். 2 படகுகளில் 14 மீனவர்கள் டன் கணக்கிலான மீன்களுடன் தப்பிச் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. சிறை பிடித்த 2 படகுகள், 6 மீனவரை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இவர்களிடம் முதல்கட்ட விசாரணைக்கு பின். மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com