தமுமுக சார்பில் திருக்களாச்சேரி யில் கல்வி விருது மரக்கன்றுகள் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி கிளை சார்பாக இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆவே அப்துல் ஹமீது மற்றும் ஆவே அப்துல் சுக்கூர் ஆகியோரின் நினைவாக கல்வி விருது, மரக்கன்றுகள் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தமுமுக கிளை தலைவர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார்.கிளை செயலாளர் ஹாஜா கபீர், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் o.A.முகமது காசிம் மமக மாவட்ட துணை செயலாளர் எம் ஜாஹீர் உசேன் முன்னிலை வகித்தனர்.முன்னதாக தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளும், தூய்மை காவலர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த 5 மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன் துவங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் O.A.முகமது காசிம் ஜமாஅத் நிர்வாகி குலாம் தஸ்தகீர், மமக மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித், மாநில செயற்குழு உறுப்பினர் S.S.A.பக்கர், மாநில ஊடகப்பிரிவு பொருளாளர் முகம்மது அபிஸர், திமுக ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், IUML மாவட்ட செயலாளர் நூருல்லாஹ், விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணை செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் மற்றும் திருக்களாச்சேரி ஜமாஅத் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் தமுமுக கிளை செயலாளர் ஹாஜாமைதீன் நன்றி கூறினார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..