திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் லாட்டரி விற்பனை ..மூவர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து, கொடைரோடு பகுதிகளில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்து தகவலை அடுத்து, அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சுரேஷ். குமார் தலைமையிலான காவல்துறையினர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்கள் யார் என தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து கொடைரோடு பகுதியை சேர்ந்த, ராதாகிருஷ்ணன், மாயக்கண்ணன், அஜித் குமார், ஆகிய மூவரை பிடித்து விசாரித்ததில், இவர்களிடம் இருந்து தங்கம், டியர், சிங்கம், ரோஜா, ஆகிய பெயர் கொண்ட சுமார் 112 லாட்டரி சீட்டுக்களையும், மற்றும் பணம் 1000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .