கீழக்கரை – காஞ்சிரங்குடி சாலையில் ஆண் பிணம் .. விபத்தா??.

கீழக்கரை – காஞ்சிரங்குடி சாலையில் உயிர் பிரிந்த நிலையில் நேற்று (20/10/2018) இளைஞர் உடல் காயத்துடன் கிடந்தது. பின்னர் விசாரணையில் அவர் பெரியபட்டிணத்தை சேர்ந்த சேக் அப்துல் காதர் மகன் செய்யது அலியார் வயது 38 என தெரிய வந்தது. அவரின் உடலை கீழக்கரை காவல்துறை மற்றும் கீழக்கரை டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மேற்பார்வையாளர்கள் அசாருதீன், பிரவின், நசுருதீன், மற்றும் அப்தஹிர் ஆகியோர் இந்த சடலத்தே மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உயிரழப்பிற்கு முன் ஆட்டோவில் சென்றதாகவும் ஆட்டோ விபத்துக்குள்ளாகி இவர் காயம்பட்டு இறந்ததிருக்கலாம் என்ற கோணத்திலும் கீழக்கரை போலீசார் விசாரணை செய்து வருவதோடு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

இறப்பில் சந்தேகம் இருப்பதால் இறந்தவர் தரப்பினர் போலீசாரிடம் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

தகவல்: கீழை ப்ரவீன்..